ஆக்ராவை சேர்ந்த பாரதி குஷ்வாஹா(21) என்ற பெண்ணும், நரேஷ்குமார் சிங்(24) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரையும் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் தரப்பில் கடந்த சனிக்கிழமை அன்று தோல்பூர் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், மனியா காவல்நிலையம் அருகே பாரதி மற்றும் நரேஷ்குமார் இருவரது சடலம் நேற்று கண்டெக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காணாமல் சென்ற பாரதி, நரேஷ்குமார் இருவரும் உறவினர்கள் என்பதும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது என்பதும் தெரியவந்தது.
விசாரணையில், ”இருவரும் வாட்ஸ் அப் மூலம் நீண்ட நேரம் தினந்தோறும் உரையாடி காதலித்து வந்துள்ளனர். இது பாரதியின் தந்தைக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பதாக கூறிய பெண்ணின் தந்தை இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காதலர்கள் இருவரும் உயிரிழந்தனர்.” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே வாட்ஸ் அப்பில் மணிக்கணக்கில் காதல் செய்த தன்னுடைய மகளையும், அவளது காதலனையும் பெண்ணின் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments