புத்தளம், மதுரங்குளிய, ரெட்பானா கிராமத்தை தளமாக கொண்டு இயங்கும் ரெட்பானா செய்திகள் இணைய தளத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவா்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 03.12.2015 அன்று கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் ஜனாப்.ZA.சன்ஹீா் அவா்களின் தலைமையில் கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக ரெட்பானா செய்திகள் தளத்தின் ஸ்தாபகா் சகோ. முஜாஸ் Bsc(Hons) அவா்கள் கலந்து கொண்டதோடு, ரெட்பானா கிராமத்தின் முக்கிய பிரமுகா்கள் உட்பட பெற்றா்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனா்.
2015ம் ஆண்டு கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இறுதிப்பரீட்சையில் பங்கேற்று முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, துறைசார் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தங்களது திறமைகளை வெளிப்படுபத்திய மாணவா்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி அனைத்து நிகழ்வுகளையும் கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவன் Mr.MNM.சஹான் அவா்கள் தொகுத்து வழங்கிய அதே வேளை, மேற்படி நிகழ்வுக்கான அணைத்து ஏற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளா் AM.ருக்ஸான் அவா்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments