Subscribe Us

header ads

சவூதியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய மற்றுமொரு பெண்!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய வீட்டின் உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வசித்து வந்த மேலும் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் இலங்கை திரும்பிய பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர், உட்பட மூவரும் பல முறை இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த கடந்த வருடம் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.

மூன்று பிள்ளைகளின் தாயான 33 வயதான இந்த பெண் பாலியல் வல்லுறவால் கடும் துன்பத்தை அனுபவித்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பிய அந்த பெண் முகவர் நிறுவனத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த நிலை தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத்தை சேர்ந்த இந்த பெண், பொகவந்தலாவ காவற்துறை நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நாவலப்பிட்டி சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் முறைப்பாட்டை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காவற்துறையினருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக பொகவந்தலாவ காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments