SLTJ யினால் ஜம்இய்யாவிற்கு அனுப்பட்ட கடிதத்திற்கு விளக்கம் கோரி ஜம்இய்யாவை நான் தொடர்பு கொண்டேன். அவர்கள் சில தெளிவுகளை அழகாக முன்வைத்தார்கள். அதனை பொது மக்கள் புரியும் வண்ணம் மீடியாக்களுக்கு அனுப்பிவையுங்கள் என கேட்டுக் கொண்ட சமயம் அவர்கள் கூறியதாவது நாம் அவர்களுடன் விவாதிக்கவோ தர்க்கம் புரியோ கடிதம் அனுப்பவில்லை மாறாக நாட்டு மக்களின் ஓற்றுமையை கவனத்தில் கொண்டு ஒரு உபதேசமாககத்தான் அவர்களுக்கு அனுப்பிவைத்தோம் எனவே கடிதத்திற்கு கடிதம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என கூறினார்கள்.
உண்மையில் ஜம்இய்யா எமது தாய் சபை அவர்கள் ஒன்று செய்வார்களாயின் அது தூர நோக்குடன்தான் செய்வார்கள். அவர்களின் கதையில் எனக்கு விளங்கியது இவர்கள் சிறு பிள்ளைகள் அப்பாவிகள் விளப்பமில்லாத குழப்பவாதிகள் இவர்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை என்பதாக.
தொடர்ந்து அவர்களிடம் நான் பெற்ற தெளிவுகள்.
2005ஆம் ஆண்டில் பீ.ஜே அவர்களின் வருகையால் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டதால்தான் அவர்களது வீஸா இரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பட்டார்கள் என்பது யாவரும் அறிந்த பகிரங்க விடயம்தானே
மேலும் ஜம்இய்யா காதியானிகள் விடயத்தில் பாரிய முயற்சிகள் செய்துள்ளது. 2007 ஆண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள், துறைசார்ந்தவர்கள், அரபு மத்ரஸா உஸ்தாதுமார்கள், முக்கிய நிறுவனங்கள், சட்டவல்லுனர்கள் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் மாநாடொன்றை ரன்முத்து ஹோட்டலில் ஏற்பாடு செய்து நடாத்தி அதில் முக்கிய தீர்மானங்களையும் எடுத்துள்ளது. அது இன்றுவரைக்கும் மக்கள் மத்தியில் சொல்லப்பட்டுக்கொண்டுதான் வருகின்றது. அந்த தீர்மானங்கள் பள்ளிவாயல்களில் கூட பதாதைகளாக தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் இன்னோரன்ன பல விடயங்கள் இது விடயமாக மேற்கொண்டவண்ணம் உள்ளது.
ஷியாக்கள் விடயமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டுபன்னுவதற்காக மனாகிபுஸ் ஸஹாபா என்ற தலைப்பில் பல கருத்தரங்குகள் ஜம்இய்யாவின் கிளைகள் ரீதியாக நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இது விடயமாக தேசிய மாநாடொன்றையும் கடந்த 2015.05ஆம் மாதம் நடாத்தியும் உள்ளது. அது மட்டுமல்லாமல் ஈரான் நாட்டு தூதுவரையும் நேரடியாக சந்தித்து உங்கள் நாட்டு கலாசாரத்தை எம் நாட்டில் நுழைவிக்க முயற்சிக்க வேண்டாம் என பகிரங்க அறிவித்தல்களும் வழங்கியுள்ளார்கள்.
அசின் விராது வந்த விடயத்தில் பல நடவடிக்கைகள் ஜம்இய்யாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் அந்நேரத்தில் அவைகளை வெளிப்படுத்துவதற்குன்டான கால நிலைமைகள் இடம் கொடுக்கவில்லை. மேலும் அவர்களின் வருகையில் அரசியல் பின்னணிகளும் இருந்தது யாவரும் அறிந்த விடயம். ஜம்இய்யா என்று வரும்போது அது ஒட்டுமொத்த அனைத்து முஸ்லிம்களையும் சாரும் என்பதால் மிக நிதானமாக தூரநோக்குடன் நடக்க வேண்டிய கட்டாய நிலைப்பாட்டில் உள்ளது.
எனவே சுமார் 90வருடம் சம்பளமில்லாமல் மக்களுக்கு நல்ல பல சேவைகளை புரிந்து கொண்டிருக்கும் இச்சபையின் பின்புலங்களை விளங்காமல் சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது மடத்தனத்தின் உற்சகட்டமாகும். அவர்களின் சேவைகள் மீடியாக்களில் வருவது அறிது ஏனெனில் அவர்களின் செய்யும் ஒவ்வொரு சேவைகளையும் காட்டி பணம் வசூலிக்க வேண்டிய தேவையில்லை. அதாவது பணத்திற்காக சேவை செய்பவர்கள் அல்ல மாறாக அல்லாஹ்விற்காக சமூக நலன்கருதி பல பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனை கரைத்து அந்த சிறு பிள்ளைகளின் வாயில் ஊற்றி குடிக்கவைத்து விளங்க செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
அவர்களின் குழப்பத்திற்கு உடைந்தையாக இருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

-Safras Arham-
0 Comments