Zam Zam Foundation இன் School with a smile எனும் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள மூவினங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளை சிரித்த முகத்தோடு பாடசாலைக்கு அனுப்பும் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.
School with a smile எனும் இவ் வேலைத் திட்டத்தில் ஒரு மாணவருக்கு 3000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த வருடம் 5600 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயனடைந்திருக்கின்றனர்.
இத்திட்டத்திற்கு உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்லாஹ் உங்களது உதவிகளைப் பொருந்திக் கொள்வானாக.
2016 புதிய கல்வி ஆண்டை முன்னிட்டு 10,000 மாணவர்களுக்கு இந்த உதவியை வழங்க Zam Zam Foundation தயாராகிக் கொண்டிருக்கிறது.
Horowpothana, Aanaviludaan, Thoopur, Weeravila, Kandy, Thalawakelle, Monaragala ஆகிய பகுதிகளில் சுமார் 100 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட இருக்கின்றது.
எனவே இத்திட்டத்திற்கு உதவ முன்வாருங்கள்.உங்களது பங்களிப்பை எமக்கு அனுப்பி வையுங்கள்.(இணையம் மூலம் நேரடிப் பணப் பறிமாற்றம் செய்யும் வசதி இல்லாமைக்கு வருந்துகிறோம்)
கணக்கு விபரம்-
Zam Zam Foundation
Account Number: 250010005083
Swift Code: HBLILKLX
HNB Bank PLC
Bambalapitiya Branch
மேலதிக விபரங்களுக்கு: www.schoolwithasmile.com
0 Comments