Subscribe Us

header ads

பெண்ணாக மாறிய ஆண் மரம்: அறிவியல் அதிசயம் (PHOTOS)

மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு தாவரம் வாழ்வதே அரிதிலும் அரிது. அதிலும் அது பல ஆயிரம் ஆண்டுகளாக ஆண் மரமாக இருந்துவிட்டு, திடீரென பெண் மரமாக மாறியிருப்பது அரிதுமட்டுமல்ல புரியாத புதிராகவும் உள்ளது.

ஸ்கொட்லாந்த் நாட்டில் பெர்த்ஷையர் நகரில் உள்ளது இந்த போர்டிங்கால் யீவ் என்ற மரம். இந்த மரம் 3000 ஆண்டுகளாக வாழ்கிறது.

இது ஒரு ஆண் மரத்துக்குரிய மகரந்தம் மற்றும் பண்புகள் இருந்ததாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலமாக பெண் மரத்துக்குரிய. சிவப்பு பழங்களை கொடுக்கிறது. விதைகளும், அதில் முளைப்பயிரும் கூட வளர்கிறது, இது அந்த மரத்தின் ஒரு பகுதியில் தொடங்கியுள்ளது.

இந்த வினோத மாற்றத்திற்கான சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாமல் தாவரவியல் வல்லுநர்களும் குழம்பியுள்ளனர். தவரவியல் அறிஞர் டாக்டர் காலெமன் யீவ் மரம் பாலின மாற்றத்துக்கு உட்பட்டிருப்பதை உறுதிசெய்துள்ளார்.

ஒரு கிளையில் மட்டும் சிவப்பு பழங்களை கொடுத்திருந்தாலும் இந்த வெளிப்பாடு மொத்த மரமும் பெண் மரமாக மாறுவதற்கான அறிகுறி என்றே கூறுகின்றார்.

ஒருவேளை ஒரே மரத்தில் கூட்டு பாலினம் ஏற்பட்டிருக்கிறதா என்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்.

இந்த யீவ் மரம் ஒரு பழமையான தேவாலயத்துக்குரிய நிலப்பகுதியில் வளர்ந்துள்ளது. இதன் சுற்றளவு மதிப்பீட்டிலிருந்து துல்லியமாக அதன் வயதை கணிக்க முடியவில்லை.

1789 ம் ஆண்டில் இதன் வயது 5000 ஆண்டுகள் என ஆய்வின் மூலம் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், சமீபத்திய வயது மதிப்பீட்டின் படி 2000 அல்லது 3000 ஆண்டுகள் வயதுடையதாகவே நம்பப்படுகிறது.

இந்த மரத்தின் மையப்பகுதி ஆய்வுக்கு உட்படுத்த முடியாத அளவில் உள்ளது. மரத்தில் ஒரு வலுவான நடுப்பகுதி இல்லை. பெருமரமே பல கிளையாக பிரிந்து சேர்ந்துள்ளது.

ஆண் மரம் சமயத்தில் பெண்மரமாகும் சாத்தியம் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. தவரவியல் அறிஞர் ஜான் வாரென் கூற்றுப்படி. அவோகடோ மரம் ஒரு இரவிலும் சில மணி நேரங்களிலும் கூட பெண்மரமாக மாறி காய்த்திருக்கிறது என்று கூறுகிறார்.

வெப்பமண்டல காடுகளிலும் மத்திய தரைகடல் தட்ப வெட்ப பகுதிகளிலும் வளரும் மரங்களில் இது போன்ற மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார்.

ஆண் மரங்களின் பூக்களிலும் பெண் பாகம் இருப்பதாகவும் அது தேனீக்கள் வந்து அமர்வதன் மூலம் மகரந்த சேர்க்கை நடந்துவிடுவதால் ஆண் மரங்களும் காய்க்கும் பெண்மரங்களாக ஆகிவிடுகின்றன என்று கூறுகிறார்.

அதிசயம் விதிவிலக்காகிறது, அந்த விதிவிலக்கும் ஏதோ ஒரு விதியின் அடிப்படையில்தான் நடக்கிறது. அதுதான் புரியாத புதிர்.

Post a Comment

0 Comments