பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலையடுத்து மூடப்பட்ட ஈபில் கோபுரம் மீண்டும் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளியன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு கருதி பாரீஸ் நகரில் உள்ள ஈபில் கோபுரம் மூடப்பட்டது. 4 நாட்கள் கடந்த நிலையில் தற்போது ஈபில் கோபுரம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடியில் உள்ள நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் ஈபில் கோபுரம் காட்சியளித்தது.
மேலும் ஏராளமானோர் அதன் அருகில் கூடி அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

0 Comments