Subscribe Us

header ads

எனது மகன் எந்த தவறும் செய்திருக்கமாட்டான்: பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டவரின் தாயார் உருக்கம் (PHOTOS)

தனது மகன் யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்க மாட்டான் என்று பிரான்சில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் தாயார் தெரிவித்துள்ளார். 

பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள கால்பந்தாட்ட மைதானம், இசை அரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் Bataclan இசை அரங்கத்தின் அருகே மனிதவெடிக்குண்டு தாக்குதலில் ஈடுபட்டு இறந்த இப்ராஹிம் அப்டெஸ்லாம் என்பவரின் தாயார், தனது மகன் யாரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செயல்பட்டிருக்கமாட்டான் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, மன அழுத்தத்தின் காரணமாகவே எனது மகன் வெடிக்குண்டை வெடிக்க செய்திருக்க வேண்டும்.

கண்டிப்பாக அவன் யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செயல்பட்டிருக்க மாட்டான். தாக்குதலில் ஈடுபடுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை அவன் சாதாரணமாகவே இருந்தான்.

எந்த நாசவேலைகளுக்கு அவன் திட்டமிட்டதாக தெரியவில்லை. அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிக்குண்டை வெடிக்க செய்த போது யாரும் இறக்கவில்லை என்பதே இதற்கு சாட்சி என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக இப்ராகிமின் கடைசி சகோதரர் முகமது அப்டெஸ்லாம் என்பவரை பெல்ஜியம் பொலிசார் கைது செய்திருந்தனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அவரை தற்போது விடுதலை செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து  முகமது கூறுகையில், எனது சகோதரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பார்கள் என்று என்னால் எந்த நிலையிலும் நினைக்க முடியவில்லை.

இந்த தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்து அனுதாபப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அவரது இன்னோரு சகோதரர் சாலா அப்டெஸ்லாம் என்பவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments