கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி தங்காலை கப்பற்படை ருஹுனு இராணுவ முகாமில் சேவையில் இருந்த போது தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை எடுத்துகொண்டு இராணுவ சீரூடையுடன் மாத்தறை வெவஹன்மன்துவையில் வசிக்கும் காதலியின் வீட்டிற்கு வந்த இராணுவ சிப்பாய் சமன் குமார தனது காதலியின் அறைக்குள் சென்று 14 தோட்டாக்களை கொண்டு அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் அறையின் மூலையில் விழுந்து கிடந்த தனது காதலியின் இறுதி மூச்சு நிற்பதற்கு முன்னர் சமன் குமார வீட்டின் நடுவில் சென்று தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் மணமகளின் தோழியாக செல்வதற்கு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சமிலா பிரசானியின் கனவு கலைந்து அவரது இறுதி பயணத்தில் அவரையே மணப்பெண் போன்று அலங்கரிக்க நேரிடும் என்று யாரும் எண்ணவில்லை.
காதலன் அவசரமாக வேஷம் தரித்துக்கொண்டு வந்து அவரது வாழ்க்கையை பலி எடுத்து விட்டார்.
மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்த சமிலாவின் தந்தை 12 வருடங்களுக்கு முன்னர் இந்த உலகைவிட்டு செல்லும் போது மூன்று பிள்ளைகளுடன் குடும்ப சுமையை சமிலாவின் தாய் தனியாக பொறுப்பெடுத்தார்.
அவர் தனது மூன்று பிள்ளைகளை வளர்ப்பதற்கு பல கஷ்டங்களை அனுபவித்தார். சமிலா தொழிலுக்கு செல்லும் அளவு படிக்க வைப்பற்கு அவரது தாய் எந்த அளவில் துன்பங்களை அனுபவித்திருப்பார்.
அத்துடன் தனது மூன்று பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்ந்துள்ள அந்த தாய்க்கு தனது மூத்த மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடித்து வைப்பது தான் அவரது முக்கியமான நோக்கமாக இருந்தது.
மாத்தறை மஹாநாம கல்லூரியில் கல்வி பயின்ற சமிலா உயர் தரத்தில் சிறப்பான சித்திகளை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பட்டதாரியான அவருக்கு மாத்தறை பேராதனை செயலகத்தில் குழந்தை நடவடிக்கை அபிவிருத்தி அதிகாரியாக பதவி ஒன்றும் கிடைத்தது.
கல்வியின் பெறுமதி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருந்த சமிலா தனது சகோதரிகளும் சிறப்பான கல்வியை பெற்றுகொடுப்பதற்கு தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பஸ்ஸில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக சந்தித்த அடையாளம் தெரியாத கடற்படை சிப்பாய் வாழ்க்கையின் அருகிலே இருந்த காதலனாகவும், அதன் பின்னர் தனது வாழ்க்கையை அழிக்கும் கொலைகாரனாகவும் மாறுவார் என ஒரு போதும் சமிலா நினைக்கவில்லை.
காதலிக்கும் காலத்தில் சமன் குமார தனக்கு பொருத்தமற்றவர் என புரிந்து கொண்ட சமிலா அவருக்கு புரிய வைத்து அவரை விட்டு விலக முயற்சித்துள்ளார்.
கணவனை இழந்த நாளில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்த தனது தாயின் ஆசிர்வாதத்துடன் தனது திருமணம் நடைபெற வேண்டும் என சமிலா எண்ணினார்.
சமன் குமரவினால் தொடர்ந்து ஏற்பட்ட துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சமிலா ஆயத்தமாகினார்.
எனினும் சமிலாவின் தோழி ஒருவர் கூறுகையில் சமிலா அவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் சமன்குமரவை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தால் இவ்வாறானதொரு விபத்து நிகழாமல் தடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சமிலா பல சந்தர்ப்பங்களில் தனது காதலனை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல முயற்சித்த போதிலும் அதில் எந்த வித பயனும் இல்லை.
எனினும் தற்போது அனைத்து விபத்துக்களும் நடந்து முடிந்து விட்டன. தாய்க்கு தனது அன்பான மகளை இழக்க நேரிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் யுத்தகாலகட்டத்தில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களை சமூகத்திற்குள் சாதாரணமாக நடமாட விட்டதன் பின்னர் அவர்களினால் ஏற்பட்ட முதல் விபத்தும் இது அல்ல.
கடந்த காலங்கள் முழுவதும் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் சட்டத்தின் பிடியில் சிக்கி குற்றம் உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளும் இந்த வீரர்களே.
சாதாரண சிவில் குடிமக்களை விடவும் இவர்களினுள் காணப்படும் வன்முறையான நடத்தை தொடர்பில் சமூதாயத்தில் தொடர்ந்து பேசப்பட்ட போதிலும் அதற்கான முடிவு ஒன்றும் இதுவரை கிடைப்பதாக இல்லை.
அமெரிக்கா – வியட்நாம் போரின் பின்னர் அமெரிக்க வீரர்களினுள் காணப்பட்ட அசாதாரண நடத்தை முறை காரணமாக 1970ம் ஆண்டு இது தொடர்பில் ஆராய்ந்த அந்த நாடுகளின் மனநல மருத்துவர்கள் தெளிவாக அறிந்து கொண்ட விடயம் என்னவென்றால்,
யுத்த காலக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட வீரர்களின் மனநிலை ஏனைய சிவில் சமூகத்தினரின் மனநிலையை விடவும் பல மாற்றங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தின் போது கிடைத்த அனுபவங்கள், கடுமையான பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு சாதாரண பொது மக்களை விடவும் மனக்கிளர்ச்சி நிலை, வன்முறையான நிலைமை அதிகமாக இருப்பதோடு அவ்வாறான நபர்கள் அதிகம் தனிமைபடுத்தப்பட்டிருப்பதனால் அன்பு காட்டுவதில் அசாதாரண நிலைமைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதன் போது சாதாரண வாழ்க்கை அனுபவத்திற்கும் யுத்த அனுபவத்திற்கும் இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்படும். அவர்களினால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் என மிகவும் தெளிவாக உறுதியாகியுள்ளது.
இந்த மன நிலைமை (PTSP) என்ற பெயரில் உருவாகும் ஒரு மன அழுத்தம் என மனநல மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் மேஜர் சுஸந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைக்குள்ளான நபர் சமூகத்திற்குள் செல்வதற்கு முன்னர் அவர்களை மனநல பரிசோதனைக்குற்படுத்தப்பட வேண்டும்.
ஏதேனும் சம்பவங்களின் போது வன்முறையான மனநிலைமையை கொண்ட இவ்வாறான நபர்கள் திடீர் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயல்பான நடத்தை முறையில் இவர்கள் காணப்பட்டாலும், கட்டுபடுத்த முடியாத உடல் வலிமையை மற்றும் அதிக உணர்ச்சிவசப்பட்டு அசாதாரண நடத்தையினையும் காட்டும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்கு உருவாக முடியும்.
கடுமையான கட்டுபாட்டு அழுத்தத்தின் கீழ் செயற்பட்ட இவர்கள் தங்களை கட்டுபடுத்த முடியாத நிலைமையின் போது இவ்வாறான விபத்துக்கள் உருவாகும் நிலமை ஏற்படலாம்.
இவ்வாறான சமூக பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். நாளுக்கு நாள் இராணுவ வீரர்களினால் ஏற்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் அறிக்கை தயாரித்தல் அல்லது சட்டத்தின் முன் கொண்டு செல்வதற்கு முன்னர் போர் சூழ்நிலையின் போது இராணுவத்தை விட்டு சென்று குற்ற செயல்களில் ஈடுபடும் இந்த நபர்களின் மன அழுத்தத்தை மேலாண்மை செய்வது மிகவும் அவசியம் என்பது மனநல மருத்துவரின் கருத்தாகும். இது இராணுவ வீரர்களினால் ஏற்படும் பெரியளவிலான குற்றங்களை தடுப்பதற்கு மிகவும் சரியான வழியாகும்.






0 Comments