Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள எழில் நிறைந்த ஒரு பிரதேசம் தான் கல்பிட்டி பிரதேசம் ...

இயற்கை அன்னை கொடுத்த மூன்று பக்கமும் கடல் , அதன் நடுவே குட்டி குட்டி தீவுகள் என்றும் , மக்களின் பிரதான தொழிலான பச்சை பசேல் எனும் விவசாயமும் , நாட்டின் பிரதான வருவாயை பெற்று தரும் தென்னை தோப்புக்களும் , இலங்கைக்கே உணவாகி போகும் கடல் உயிரினங்களும் என்று நமது பிரதேச வளங்களையும் சிறப்புக்களையும் அடுக்கிகொண்டே போகலாம் .

இதனால் தான் இந்த பிரதேசம் இன்று சுற்றுலா பிரதேசமாய் மாற்றம் பெற்று பல் ஹோட்டல்கள் நிர்மானிக்கப்பட்டு , வெளிநாட்டு விருந்தினர்களின் வருகையும் அதிகமாய் காணப்படுகிறது .

இப்படி வெளிநாட்டு மக்களுக்கும் , வெளியூர் மக்களுக்கும் உல்லாச புரியாய் இருக்கும் இந்த பிரதேசம் கல்பிட்டி வாழ் மக்களுக்கு கவலையான பகுதியாகவே காணப்படுகிறது .

ஏனெனில் , துரித பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப கல்பிட்டி நகரின் வளர்ச்சி முன்னேற்றம் இல்லை எனலாம் .

ஒரு ஒழுங்கமைப்பு இல்லாத கடை தொகுதிகள் , வாகன தரிப்பிட வசதி இல்லாத சந்தைகள், சிறு மழையை கூட தாங்கி கொள்ளாத வாய்க்கால் கட்டமைப்புக்கள் , கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்றினால் அந்த வாகனத்திலேயே பிள்ளை பெற்று விடும் அளவிற்கு பாதைகள் , முன்னறிவிப்பு இல்லாது அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம் என்று நமது குறைகளை அடுக்கி கொண்டே போகலாம் .

இதற்கு நாம் அரசியல்வாதிகளை குறை கூற முன்பு இப்படியான அரசியல்வாதிகளை தெரிவு செய்யும் மக்களாகிய நம்மை நினைத்தே நாம் கவலை பட வேண்டி உள்ளது .

காரணம் நாம் இதுவரை பிரதேச சபைக்கு அனுப்பிய தலைவர்கள் அனைவரும் உயர்தரம் கூட சித்தியடையாத , எந்த திட்டமிடலும் இல்லாத வங்குரோத்து அரசியல்வாதிகள் ..

உறுப்பினர்களும் அப்படியே , இன்று தாரிக் எங்கே ? இன்பாஸ் எங்கே ?

அது மட்டுமில்லை மாகாண சபை , பாராளுமன்ற தேர்தல் காலத்தில் வந்து நாம் கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் நமக்கே வாக்களிக்க வேண்டும் , புத்தளம் மண்ணை சேர்ந்தோருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லிய ...

வேட்பாளர் பைரூஸ் எங்கே ? வேட்பாளர் எஹியா எங்கே ? வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் எங்கே? வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் எங்கே ?

இவர்கள் அனைவருமே இன்று அரசின் பங்காளிகள் , இவர்களின் தலைவர்கள் அனைவரும் முக்கிய பதவிகளில் தான் இருக்கிறார்கள் ..

இவர்கள் மனது வைத்தால் நமது நகரை எழில்மிகு நகராய் மாற்றலாம் , ஆனால் செய்ய மாட்டார்கள் .

ஏனெனில் , நாம் இவர்களிடம் இதை பற்றியெல்லாம் காலம் கழிந்த பின்பு பேச மாட்டோம் மறந்து விடுவோம் எனும் நப்பாசையில் உள்ளனர் , அப்படி பேசினாலும் நமது மக்களின் வாய்களை பணத்தாலும் , சாராய போத்தல்களினாலும் அடைத்து விடலாம் எனும் கனவில் உள்ளார்கள் .

இந்த நிலை மாற வேண்டுமெனில் இளைஞ்சர்கள் ஆகிய நாம் ஒன்று பட வேண்டும் , நம்மால் பெரிதாய் எதையும் செய்ய முடியாவிட்டாலும் செய்விக்க அழுத்தம் கொடுப்பவர்களாய் மாற வேண்டும் .

அதன் ஒரு கட்டமாய் கூறுகிறோம் ..

சகோதரர் பைரூஸ் அவர்களே ! அழைத்து வாருங்கள் உங்கள் தலைவரான நகர அபிவிருத்தி அமைச்சரை ...

சகோதரர் நியாஸ் அவர்களே ! அழைத்து வாருங்கள் முதல் அமைச்சரையும் உங்கள் மாகாண சபை அமைச்சர்களையும் , உங்கள் தலைவரையும் .

சகோதரர் தாஹிர் அவர்களே ! நீங்களும் உங்கள் தலைவர் ஜனாதிபதி ஊடாகவும் அமைச்சர்கள் மூலமாகவும் விசேட நிதிகளை பெற்று வாருங்கள் ., கூடவே முதலமைச்சரையும் அழைத்து வாருங்கள் .

சகோதரர் எஹியா அவர்களே ! உங்கள் தலைவரை நீங்கள் அழைத்து வாருங்கள் ...

நமது நகரிற்கான திட்டங்களை மேற்கொள்ளுங்கள் , அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்துங்கள் ...

இல்லையேல் , பழையன கழிய புதியன உள் நுழையும் எனும் வார்த்தைகள் உண்மையாகி போகும் காலம் தூரமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

கல்பிட்டி நேசன்

Post a Comment

0 Comments