Subscribe Us

header ads

சீதனம் கொடுத்து வேதனைபட்ட மாமனாருக்கு வேதனையுடன் மருமகனின் மடல்!!!



அன்புள்ள மாமாவுக்கு, இது மருமகனின் மடல்..


மாமா உங்கள் கடிதம் கண்டேன். நீங்கள் கிழித்துப் போடுவதாக கூறிவிட்டு மருமக்களின் மானத்தை எல்லாம் கிழர்ந்தெளச் செய்திருக்கிறீர்கள். அன்பான மாமாவே இதற்காக உங்கள் மகளை விட்டு தூரம் ஓடிவிட மாட்டேன். அவளை உங்கள் மடலுக்காக அடிக்க மாட்டேன். காரணம் கரம் பற்றிய மறு நிமிடம் அவள் என் மனைவி.
உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் கட்டியிருக்கும் இந்த வீடு பெரிதாக இருக்கலாம். ஒரு வீடு கட்டிய உங்களுக்ககே மனம் வலிக்கிறது என்றால் எனது சிறு பருவம் முதலே எனது 2 தாத்தா மாருக்கும் 2 தங்கைகளுக்கும் நான் தனியாளாக நின்று கட்டிய வீடுகளை எண்ணிப் பார்க்கின்றேன்.
மாமா நீங்கள் சொந்தமாக வீடு கட்டியதாக மார்தட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் கட்டிய வீடு உங்கள் மனைவியின் பழைய வளவாகவோ அல்லது உங்கள் மாமனார் உங்களுக்கு தந்த சொத்தாகவோ அன்றி வேறொன்றாக இருக்காது என்பது ஐதீகம்.
நானா மாமா உங்களிடம் வந்து என்னை நீங்கள் இந்த அடிமாட்டு சந்தையில் எடுங்கள் என்று மண்டியிட்டேன்? எனது தொழிலுக்காக உங்களைப் போன்ற மாமா மார் போட்டி போட்டு வந்தீர்கள். நான் எனது தாத்தாவையும் தங்கச்சியையும் கரை சேர்க்கும் வரையில் இந்த ஊரில் உங்களை காணவே இல்லையே மாமா.
மாமா நீங்கள் எனது தாயாரிடம் களியானத்துக்கு முன் உங்கள் மனைவியுடன் வந்து கூறிய  பொய்களை எண்ணிப் பாருங்கள். எனது தாயிடமும் நண்பனிடமும் எனது சம்பளம் தொழில் பற்றி எத்தனை முறை விசாரித்திருப்பீர்கள் என எண்ணிப் பாருங்கள். நீங்கள் எனது பே சீட் வரை வந்து எட்டிப்பார்த்துப் போனதை பட்சி சொல்லிசு மாமா.
நான் எனது தாயைக் கவனிப்பதற்காக  கடைசி காலம் வரை எனது  வீட்டில் தான் வாழ வேண்டும் எனக் கூற என்னை பலிக்கடாவாக்கி உங்கள் வீட்டில் தான் வாழவேண்டும் ஊர் ஆயிரம் சொல்லும் அதை நாம கண்டுக்கப் படாது என்றீர்கள். ஆக மொத்தத்தில் நீங்கள் கூறியதெல்லாம் பொயதானா மாமா?
மாமா நீங்கள் கட்டிய வீட்டு மாபிள்கள் கழன்று வருகிறது. நீங்கள் ஒட்டிய கொமட்டினால் மலம் வெளியேறுகிறது. மாடி வீடு கட்டுவதாக நீங்கள் ஊரெல்லாம் கூறி விட்டு போட்ட பிளேட்டினால் ஆவிபறிகிறது. மலிவு விலையில் நீங்கள் மனம் நொந்து பிடித்த வேலையாட்களை கொண்டு கட்டிய வீட்டின் திருத்தவேலைகளை நான் ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடு உங்கள் மருமகன் என்ற வகையில் எனக்கிருக்கிறது. இது எனக்கு 5வது வீடு.
மாமா நான் எனது தங்கைக்கோ தாத்தாவுக்கோ பார்த்து பார்த்து செய்யவில்லை பார்த்தும் பார்க்காமலுமே வீட்டை கட்டி முடித்தேன். நான் போட்ட ஜன்னல் கிறில்கள் வளையவில்லை ஆனால் உங்கள் வீட்டு கிறில்கள் நாடாங்கடையில் வாங்கிய கம்பிகளோ தெரியாது அவ்வளவு மெல்லியதாக வளைகிறது.
மாமா அவைகளை நான் சகித்துக் கொள்கிறேன் உங்களுக்காகவல்ல. என் மனைவிக்காக. ஆனால் நான் இன்னும் இன்னும் பரீட்சைகளை எதிர் கொண்டுவிட்டு வரும் போது நீங்கள் கதிரையில் அமர்ந்திருந்து கேள்விக் கணைகளைத் தொடுப்பீர்கள்.. எனது நண்பனை அயலவனை ஒப்பிட்டு என்னிடம் கேள்விகள் கேட்பீர்கள் இதனை என்னால் சகிக்கமுடியாது. நீங்கள் என் படிப்பு என் சுக துக்கம் எவற்றிலும் பங்கு கொண்டிருக்க மாட்டீர்கள். திருமணத்திற்கு முன்பு. ஆனால் எனது தாய் தகப்பன் சகோதரங்கள் கேட்காத கெள்விகளை கேட்டு நோகாமல் சாகடிப்பீர்கள்.
மாமா நீங்கள் ஓர் போற்றும் ஹாஜியாக இருப்பீர்கள் உங்கள் குணத்தில் கருமி வாசம் வீசும். உங்களுடன் உள்ளிருந்து பளகிப்பார்ப்பதனால் என்னவோ அது எமக்கு நன்றாக புரியும். 25 வயதில் 65ஐ தப்பு தப்பாக பேசுகிறோம் என்பீர்கள் எஙளைவிட மூத்த அந்த காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்டது கருமித்தனம் மாத்திரமா மாமா?
மாமா நீங்கள் வளர்த்து விட்ட மகள் என் மனைவி என் தாய்க்கு மாதம் ஒன்றுக்கேனும் 5000 ரூபா பணம் கொடுக்க விடுவதில்லை. எனது செலவுக்காக வைத்திருக்கும் பணத்தினை ஒழித்து மறைத்து என்னை சுமந்து பெற்ற தாய்க்கு கொடுக்க வேண்டிய துற்பாக்கிய நிலை எனக்கு. இதற்கு நான் உங்களிடம் கை நீட்டி கைக்கூலி வாங்கியது கிடையாது. உங்கள் வார்த்தைக்காக உங்கள் வீட்டில் வந்திருந்தது என் பிழையா மாமா? புலிக்கு பிறந்தது பூனையாகுமா? கருமித்தனத்திலும்.
மாமா கடந்த  பெருனாளைக்கு உடுப்பெடுக்குமாறு பத்தாயிரம் ரூபாவை உங்கள் மகளிடம் நீட்டினீர்கள். புள்ள நீயும் மச்சானும் உடுப்பெடுங்க என்று இறுமாப்பா சொன்னீர்கள். எனது சேட்டும் ரவுசருக்கும் இழிந்த விலையா 4000 ரூபா போனாலும் மீதி ஆறாயிரத்தில் தானா உங்கள் மகளின் உடுப்பு?
ஆனால் உங்கள் மகளுக்கு இந்தப் பெருனாளைக்கு நான் உடுப்பு எடுத்த்துக் கொடுத்த பணத்தில் கால் வாசியைக்கூட உங்களால் கொடுக்க முடியமல் உள்ளது மாமா.

பின்பு மருமகன் பெருனாளைக்கு உடுப்பெடுத்து கேட்பதாகவும் நீங்கள் கடிதமெழுதி வைத்து காணாமல் போவீர்கள். மாமா நாங்கள் உங்களிடம் எதிர் பார்க்காதவற்றையெல்லாம் செய்யாதீர்கள். கேவலமாக உள்ளது.
மாமா நீங்கள் உங்கள் மகனின் வளவை விற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனின் சொத்தை முறைப்படி கொடுத்திருந்தால் உங்களைப் போன்ற இன்னொரு மாமாவிடம் மாட்டி பரிதவிக்காமல் அவனாவது நிம்மதியாக இருந்திருப்பான்.
மாமா நீங்கள் போன்ற மாமாமார் உங்கள் காலத்தில் இருந்து தவறுகளைச் செய்து விட்டு இந்த இளம் சந்ததி மீது குற்றம் சுமத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.
“உங்கள் மகள் முற்றி குரங்கானாலும் பரவாயில்ல சீதனமாக வீடோ பொடுளோ கொடுக்க மாட்டேன் “என நீங்களும் உங்களைப் போன்ற மாமாமாரும் ஒரு பிள்ளையை தியாகம் செய்திருந்தால் போதும். சீதனப் பிரட்சனை தீர்ந்திருக்கும்.
அதனை விடுத்து வரட்டு கெளரவத்துக்காக உணவளிப்பவன் இறைவன் என்பதனையும் மறந்து பென்சன் உள்ள மாப்பிள்ளையாய் பார்த்து அவனுக்கும் இல்லாத பொல்லாத ஆசைகளை ஊட்டி அவன் வீட்டில் நாயா தவங்கிடந்து எடுத்துவிட்டு நா கூசாமல் ஊர் முழுக்க பேசுவதில் அர்த்தம் இல்லை மாமா.
அதனை விடவும் இலகுவான முறை மாமா உங்களைப் போன்ற அனைவரும் சேர்ந்து இஸ்லாம் கூறிய வழிமுறையில் வாரிசு உரிமைச் சட்டத்தை அமுல் படுத்தக் கோருவது.
மாமா எனது கடிதத்தில் உங்களுக்கு தெளிவு உண்டென நம்புகிறேன். நீங்கள் வாங்கிய ரீவியில் நமீதாவும். நயன் தாராவும் ஆடுவதனை விடிய விடிய பாராது நான் சொன்ன விடயங்களை கரிசனையில் எடுத்து அமுல் படுத்த உரிய நபர்களை நாடுங்கள் அன்பு மாமா.
இப்படிக்கு பாசமுள்ள..
உங்கள் மறுமகன்.
(SADEER)

Post a Comment

0 Comments