கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை இன்று இரவு 09.10 அளவில் யுஎல் 309 மூலம் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments