முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதே பொதுபலசேனா அமைப்பின் நோக்கம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அசாத் சாலி,
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரம சிங்க ஆகியோர் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த தவறியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்து வருவதுடன், இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொது பல சேனா அமைப்பு கொண்டுள்ள தீவிர பாசம் காரணமாகவே அவர்கள் இவ்வாறான வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments