கொழும்பு, தனியார் வைத்தியசாலையொன்றில் சோபித தேரர், இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளை, வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக தேரரின் இருதயத்தின் முக்கிய பகுதியொன்று கூடுதலாக அறுபட்டதாகவும், அதன் காரணமாக வெளியேறிய குருதியை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி, தனது பிரத்தியேக (தனியார் செனலிங் சென்டரொன்றில்) வாடிக்கையாளர்கள் (நோயாளர்கள்) 21 பேரை பரிசோதித்து விட்டு வைத்தியசாலைக்கு வரும்போது வெகு தாமதமாகியிருந்ததாகவும், இதன்போது நிலைமை கைமீறிப் போயிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடனே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டில் சோபித தேரர் அவசரமாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆயினும், அதிக குருதி வெளியேற்றத்தின் காரணமாக எற்பட்டிருந்த கடும் காய்ச்சலால் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை பயனளிக்காமல் சோபித தேரர் உயிரிழக்க நேரிட்டதாக அறியக் கிடைக்கிறது.
தமிழாக்கம் : தினசரி

0 Comments