தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினையடுத்து வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு வசதிகளையும்,பாதுகாப்பான இடவசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடத்தில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தற்போது பெய்துவரும் மழையினையடுத்து மன்னார் மாவட்டத்தில் மடு,மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 524 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்ட வீடுகளை சேதமுற்றிருப்பதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமத்துவ மையம் தெரிவித்துள்ளதாலும் தற்போதைய நிலைய அதிகரிக்கும் பட்சத்தில் பாதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று மன்னாருக்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் பாதிப்புக்குள்ளான் சில பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமையினை நேரில் கண்டறிந்த பின்னர் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதே வேளை கிழக்கில் புல்மோட்டை உள்ளிட்ட அம்பறை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும்,அதே போல் புத்தளம் நகரம் உட்பட ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சமைத்த உணவுகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கப்டும் என்றும்,அதற்கான நிதிகளை அரசாங்க அதிபருக்கு விடுவிக்க நடவடிக்கையெடுததுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தகவல் தருகையில் –
மன்னார் மாவட்டத்தின் சில பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர் களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்அதே போல் இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களுடனும் தான் பேசியுள்ளதாக கூறினார்.
இந்த பணிப்புரைகளுக்கு அமைய நாம் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் சில பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளோம் என்றும் கூறினார்.
0 Comments