![]() |
File Picture |
பிரான்ஸ் நோக்கிச் சென்ற ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் இன்னும் ஆகாயத்தில் காணப்படுவதாக நிறுவனத்தின் ஊடக மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் வீ. பெரேரா அறிவித்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கையையடுத்து அந்நாட்டில் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்ட போதிலும் அந்நாட்டுக்குள் நுழையும் விமானம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் எதுவித தடைகளையும் இதுவரை விதிக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து சென்ற குறித்த விமானம் இலங்கை நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு தரையிறங்கவுள்ளது. ஆகாயத்திலுள்ள இந்த விமானத்துக்கு இதுவரை பிரான்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் இறங்குவதற்கான எந்தவித தடைகள் குறித்த அறிவித்தலும் வரவில்லையென ஸ்ரீ லங்கான் எயார் லைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments