தற்போது பெய்துவரும் மழையினையடுத்து புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்து மையம் தெரிவித்துள்ளது.
புத்தளம்,ஆராச்சிக்கட்டு,மாதம் பை பிரதேசங்களில் சில பகுதியில் வெள்ள நிலையினை அவதானிக்க முடிந்தது.புத்தளம் கொழும்பு வீதியில் தில்லையடி,சிலாபம் கொழும்பு வீதியில் பம்பல பிரதான வீதிகளில் வெள்ள நீர் ஊடறுத்து பாய்வதால் போக்குவரத்துக்களில் தாமத நிலை காணப்படுகின்றது.
தற்போது மழை பெய்துவருவதால் தப்போவ நீர்த்தேதக்கத்தின் அறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த மத்திய நிலையத்தின் ஊடக பிரிவின் அதிகாரி பிரதீப் கொடிப்பில் தெரிவித்தார்.
அதே வேளை புத்தளம் மாவட்டத்தில் 300 வீடுகள் வரை வெள்ள நீரினால் சூழ்ந்துள்ளதாகவும்,இந்த நீர் தற்போது வடிந்து செல்வதால் எவரும் இடம் பெயர்வுக்குள்ளாகவில்லை என்றும் அவர் கூறினார்.
புத்தளம் நகரப் பகுதியில் சமகி மாவத்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும்,வெள்ள நிர் வழிந்தோட தேவையான அவசர துப்பரவு பணிகளை செய்யுமாறு புத்தளம் நகர சபை செயலாளரை அவர் கேட்டுள்ளார்.
- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
0 Comments