'ஜீன்ஸ்' காற்சட்டை அணிந்த காரணத்தினால் பெண்ணொருவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று முதுகல , உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
நிரோஷினி குமாரி முனசிங்க என்ற, 2 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கணவன் மனைவியிடையே தினசரி மோதல் இடம்பெற்று வந்த தாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தின் போது அவரது ஒரு பிள்ளை வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments