கராத்தே வீரர் வசந்த கொலை தொடர்பில் பிரதான சந்கே நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளி உண்மைக்கு புறம்பானது என்று வசந்தவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரவு விடுதியானது சட்டபூர்வ உரிய அனுமதிபத்திரம் கொண்டே இயங்கியதாகவும் அங்கு சட்டரீயற்ற எந்த செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்று நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வசந்தவின் மனைவி தெரிவித்தார்.
மேலும் புனித நகரில் இருந்து பல கிலோ மீற்றர் தொலைவிலேயே குறித்த விடுதி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்தோர் , சில ஊடகங்கள் தனது தந்தையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தனர். கொலையை செய்துவிட்டு அதனை நியாயப்படுத்த முயல்வதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்ட து.
இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வசந்தவின் மகன் கதறியழுதமை குறிப்பிடத்தக்கது.
0 Comments