சமூகவலையமைப்புகள் பல்வேறு காதல்களுக்கு அடித்தளமிட்டுள்ளன. அவற்றில் பேஸ்புக்னை பிரதானமானதாக குறிப்பிடலாம்.
பொழுது போக்கு , வியாபார அபிவிருத்தி , புதிய நண்பர்கள் , கருத்து மற்றும் திறமை வெளிப்பாடு என பலவற்றுக்கும் உதவுகின்றது பேஸ்புக்.
அதேபோல் காதலர்களுக்கும் தொடர்பாடல் ஊடகமாக மட்டுமன்றி , பல காதல்(கள்) மலரவும் பேஸ்புக் காரணமாகவுள்ளது.
பலரது காதலுக்கு உதவியாக இருக்கும் பேஸ்புக்கின் ஸ்தாபகரான மார்க் ஷூக்கர்பேர்க்கும் காதல் திருமணம் முடித்தவரே. அவர் தனது மனைவியான பிரிஸ்ஸிலா சேனை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார்.
பின்னர் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணபந்த த்தில் இணைந்துகொண்டனர்.
பிரிஸ்ஸிலா சேன் மற்றும் ஷக்கர் பேர்க் ஆகியோர் தமது முதலாவது குழந்தையை ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர். பல தடவை கருச்சிதைவுகளின் பின்னர் அவர் கர்ப்பம் தரித்திருந்தார்.
இந்நிலையில் ஷக்கர் பேர்க் தனது மனைவியுடன் அழகிய படங்கள் சிலவற்றை பகிருந்திருந்த துடன்.
தான் தந்தையாகப்போவதை எண்ணி ஆவலாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது படம் பேஸ்புக்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தந்தை என்ற அவரது புதிய அவதாரத்துக்காக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0 Comments