Subscribe Us

header ads

கடமை நேரத்தில் கண்ணியம் தவறிய பொலிஸாருக்கு கிடைத்த தண்டனை

தமது கடமைநேரத்தில் மதுபானம் அருந்திய கேகாலை காவல்துறை போக்குவரத்து பிரிவில் சேவையாற்றிய காவல்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறை சாஜன்ட் மற்றும் காவல்துறை அலுவலர் ஆகிய இருவர் இவ்வாறு பணி நீக்கம்  செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மொலகொட மற்றும் கரடுபன பகுதிகளுக்கு இடையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் அவர்கள் கடந்த 14 ஆம் திகதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அருகில் இருந்த உணவகம் ஒன்றில் அவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு காவல்துறை அலுவலர்களும் ஏற்கனவே சில தடவைகள் பணி நேரத்தில் மதுபானம் அருந்திய இருந்தமை தொடர்பில், கேகாலை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் மதுபானம் அருந்திய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments