நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமொன்று இறம்பொடை கெரண்டியலபிரதேசத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





0 Comments