சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கற்பிட்டி பிரதேச செயலகத்தால் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று 04/11/2015 இன்று புதன்கிழமை பெறியகுடியிருப்பு வாழைத்தோட்ட பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன?
அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், அதனை தடுப்பதற்கு பெற்றோர்களுக்கான அறிவுரைகள் போன்றவைகள் கலந்து கொண்டார்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
-Rizvi Hussain-





0 Comments