Subscribe Us

header ads

சீன ஜோடியின் பை ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டிபிடிக்கப்பட்டது: துரிதமாக செயற்பட்ட ஹட்டன் பொலிஸார் (படங்கள்)

பேராதெனியவிலிருந்து  நானுஓய வரை புகையிரதத்தில் பயணித்த சீன ஜோடியிடமிருந்து திருடப்பட்ட பையொன்று சில மணித்தியாலங்களில் ஹட்டன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜோடி இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியொருவருடன் இணைந்து கடந்த 2 ஆம் திகதி பேராதெனியவிலிருந்து , நானுஓய வரை உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஹெடன் ரோசெல்ல புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து சீனப் பெண்ணின் கைப்பையை , புதையிரதத்தில் பயணித்த நபரொருவர் பறித்துச் சென்றுள்ளார்.

அப்பையில் பணம் மற்றும் பெறுமதியான கையக்கத்தொலைபேசி ஆகியன இருந்துள்ளன.

பின்னர் குறித்த சீன ஜோடி ஹட்டன் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அங்கேயே ஹோட்டலொன்றில் தங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண் தனது மற்றைய கையடக்கத்தொலைபேசியின் ஊடாக,  ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது காணாமல் போன கையடக்கத்தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்ட தாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அப் பை மற்றும் அதிலிருந்த கையடக்கதொலைபேசி உட்பட பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றைத் திருடிய அந்நபர் போதைக்கு அடிமையானவர் எனவும் , அவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராண்ட்பாஸில் தனது நண்பரொருவரின் வீட்டில் இருந்தபோது கைதுசெய்யப்பட்ட தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-Sooriyan Gossip-








Post a Comment

0 Comments