Subscribe Us

header ads

மரண தண்டனை கைதிகளின் பாதுகாப்பிற்காக இந்தோனேசியா அரசு விரைவில் முதலைகளை பணியில் அமர்த்தும்

மரண தண்டனை கைதிகளின் பாதுகாப்பிற்காக இந்தோனேசியா அரசு விரைவில் முதலைகளை பணியில் அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி செல்வதை தடுப்பதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக முதலைகளை பணியில் அமர்த்த போதைப்பொருள் தடுப்புக்குழுவின் தலைவரான பூடி வாசேசோ அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்த திட்டமானது ஜேம்ஸ் பாண்ட் படத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்,

இந்த பணிக்காக தீவுப்பகுதிகளில் பல்வேறு வகையான முதலைகளை தேடிவருகிறோம், மேலும் மூர்க்கத்தனம் கொண்ட முதலைகள் தான் இந்த பணிக்கும் அதிகம் தேவைப்படுகின்றன.

ஏனெனில் இவ்வகை முதலைகள் காவலர்கள் போன்று சிறப்பாக செயல்பட்டு, போதைப்போருள் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துகொள்ளா வண்ணம் பாதுகாக்கும், அதுமட்டுமன்றி கைதிகள் மனிதகாவலர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சத்தை இந்த முதலைகளுக்கு கொடுக்க முடியாதல்லவா? அதற்காகத்தான் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளதால் விரைவில் இதுகுறித்து அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்துவது என்பது பெரிய குற்றமாகும், இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 2 அவுஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு மரணதண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments