வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்களின் நலன்கருதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
1985 ஆம் ஆணடு தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தில் பல தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், மேலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
தொழில் நிமித்தம் தொடர்தும் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வதால் தொழிலாளர்கள் தொடர்பான அந்தந்த நாடுகளின் சட்டத்திட்டங்களுடன் பொருந்துகின்ற வகையில் சட்டமூலத்தில் திருத்தங்களை மெற்கொள்ள வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்குதல், அபராதம் விதித்தல், அவர்களின் சுகாதார நிலைமைகள் என்பன குறித்து கவனம் செலுத்தி சட்டத்தில் திருத்தங்களை மெற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் நலன்கருதி எதிர்காலத்தில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதோடு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அது குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
அடிப்படை சம்பளமொன்றை நிர்ணயிப்பது குறித்து பிரேரணை தயாரிக்கப்பட்டு அது குறித்து பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதோடு, சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தஙகளில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்குதல் உள்ளிட்ட சில பிரேரணைகளை உள்ளடக்கிய பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
ஆனாலும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும் எனவும்,
இது வரையும் நடைபெற்ற தேர்தல்கள் நியாயமான மறையில் இடம்பெற்றதா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் கடந்த பொதுத் தேர்தல் நியாயமான மறையில் இடம்பெற்றுள்ளது.
ஆனாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு முன்னர் நியாயமான தேர்தலை நடாத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களி அனைத்து உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அன வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

0 Comments