பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தையொன்று விஷப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெற்கு பிரேசிலை சேர்ந்த ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டி'சோஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோவே இச்செயலை புரிந்துள்ளான்.
இச்சிறுவன், விஷ பாம்பொன்றையே இவ்வாறு கடித்துக் கொன்றுள்ளான்.
பொதுவாக, இத்தகைய பாம்புகள் கடித்து, அதற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமல் இருந்தால் ரத்த கசிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட அபாயகரமான அறிகுறிகளுடன் உடல் நலக் கோளறு ஏற்படுவது வழக்கம்.
ஆனால், இச்சிறுவன் அந்த பாம்பை கடித்துக் கொன்று அதிர்ஷ்டவசமாக நல்ல முறையில் இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..
0 Comments