Subscribe Us

header ads

பொலன்னறுவையில் மர்ம ஒளி

பொலன்னறுவை – அரலகங்வில – மாதுருஓய பகுதியில் வானில் மர்மமான ஒளி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்கள் சில இதனை கண்ணுற்றதாக தெரிவித்துள்ளனர். 

சுமார் 40 நிமிடங்கள் வரையில் இந்த ஒளி நீடித்துள்ளது. 

யால மற்றும் குமன பகுதியை அண்மித்து, கடல் இருக்கும் திசையை நோக்கி அந்த ஒளி நகர்ந்து பின்னர் மறைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, நேற்றையதினம் டபிள்யு.ரீ.1190எஃப் என்ற மர்ம விண்பொருள் ஒன்று இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த விண்பொருள் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் மணிக்கு 36 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் விழுந்த குறித்த விண்பொருள், வளிமண்டலத்தில் காற்றுடன் உராய்வுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. 

Post a Comment

0 Comments