Subscribe Us

header ads

சாஹிரா தேசிய கல்லூரியின் தேசிய மட்ட நாடகம் நேத்திரா தொலைக் காட்சி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.!

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி உயர் தர பிரிவு மாணவர்கள் இவ்வருட தேசிய மீலாத் இஸ்லாமிய நாடகப் போட்டியில் பங்கு கொண்டு புத்தளம் வடக்கு கோட்டம், புத்தளம் கல்வி வலயம், வட மேல் மாகாணம் ஆகிய மட்டங்களில் முதலாம் இடத்தை வெற்றி கொண்டனர். இதன் மூலம் அவர்கள் தமது பாடசாலைக்கு கீர்த்தியை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தேசிய மட்டத்தில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ள இந்நாடகத்தைப் பார்வையிட்ட நேத்திரா தொலைக் காட்சி நிறுவன குழுவினர் விரைவில் தமது நிறுவனத்திற்கு இம்மாணவர்களை அழைத்து ஒளி மற்றும் ஒலி பதிவை மேற்கொள்ள உள்ளனர்.




-Muhsi-





Post a Comment

0 Comments