இந்த உலகில் பயமில்லாத மனிதர்களை பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகும்.

போபியாக்களில் பலவகை உண்டு அவற்றில் ஒன்று தான் எனொக்லோபோபியா(Enocholophobia).
பலர் தனியாக இருப்பதற்கு பயப்படுவார்கள். ஆனால் ஒரு சிலரோ கூட்டத்தை பார்த்தால் பயத்தால் நடுங்குவார்கள். அப்படி கூட்டத்தை பார்த்து பயப்படுவதற்கு பெயர் தான் எனொக்லோபோபியா(Enocholophobia). அதாவது இந்த வகையினர் கூட்டத்தை பார்த்தால் பயந்து ஓடுவார்கள். எப்போதும் தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார்கள்.
காரணம் என்ன?
இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கூட்ட நெரிசலில் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாக சிலர் கருதுகின்றனர்.
அதன் காரணமாக அவர்கள் கூட்டத்தை தவிர்கின்றனர். கூச்ச சுபாவமும் இதற்கு ஒரு வகை காரணமாக உள்ளது.
சிலருக்கு கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு வகை எதிர்மறை விளைவுகள் கூட அவர்கள் கூட்டத்தை பார்த்தால் பயப்படும் நிலையை ஏற்படுத்தி இருக்கும்.
அறிகுறிகள்
அதிகம் பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியிலேயோ அல்லது கூட்டத்திலேயே சகஜமாக பங்கு பெற முடியாமல் ஒரு வித பதற்ற நிலையிலே இருக்கக்கூடும்.
இயல்பாக மூச்சு விட இயலாமல் சுவாச கோளாறு போன்றவை ஏற்படலாம். ஒருவித பதற்றம், பயம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிப்படைந்திருப்பர்.
அளவுக்கு அதிகமான நடுக்கம். வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக அவர்கள் கூட்டம் அதிகமுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் எதிலும் பங்கு பெறாமல் ஒதுங்கி நிற்கவே அதிகம் விரும்புவார்கள்.
சிகிச்சைகள்
தன்னம்பிக்கையை வளர்த்துகொள்வதே எனொக்லொபோபியாவை கட்டுப்படுத்துவதற்கான முதல் வழியாகும்.
மேலும் தகுந்த நிபுணர்களை பார்த்து இந்த நோய்க்கு சிகிச்சை மேற்கொள்வதாலும் இதனை கட்டுப்படுத்த முடியும். நம்பிக்கையானவர் ஒருவரை உடன் வைத்துக்கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது ஒரு வித தைரியத்தை தரும்.
அடுத்ததாக எடுத்தவுடன் பெரிய அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், சிறிய கூட்டங்களில் இருந்து தொடங்கினால் உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, பயம் ஆகியவைகள் சிறுக சிறுக விலகி ஓடும்.
0 Comments