Subscribe Us

header ads

புளியங்குளத்தில் ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது (படங்கள் இணைப்பு)

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பகுந்த சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது.

இதனால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

0 Comments