"இலவசக்கல்வி என்று வறுமைப்பட்ட மாணவர் வாழ்க்கையின் வருடங்களைத் தின்கிற கல்விக்கும், வியாபரக்கல்வி என்று பணம்படைத்த மாணவர் வாழ்க்கையின் வருடங்களை வளப்படுத்தும் கல்விக்கும் இடையில் சிக்கிக்கொண்டு இருக்கிறது சமூகம். சிந்தனைத் தளம் கூட செத்துவிட்டதா? என்கிற அளவுக்கும் செயலில்லாமல் போய் விட்டது நம் ஊடகச் சமூகம்.
இதையெல்லாம் பாராமல் சமூகத்தை முன்னேற்றுவதாய் நடித்துகொண்டு இருக்கிறது பொறுப்பான சமூகம்.
இதுவெல்லாம் நாம் யார் செய்த அராஜகம்."
இலவசக்கல்வி இனால் தரம் 1-11 வரையான பள்ளிப்பருவமானது இப்போது வெறும் பாடப்புத்தகத்தினுள் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி, அவர்களின் அதீத திறமைகளை அழித்தொழித்து, திணிப்புக்கு உட்படுத்துகிறது என்பது மிக உண்மையானதே.
இருந்தாலும் அந்த பாடப்புத்தகக் கல்வி கூட எந்தளவிற்கு முறையான பாதையில் ஒப்புவிக்கப்படுகிறது என்பதும் கேள்விக்குறி தான்.
இதையெல்லாம் தாண்டி தரம் 12 க்கு வருகிற மாணவர்கள் கிலோமீற்றர் தாண்டிய பஸ் பயணங்களில் தங்களின் நேரங்களைத் தொலைத்து, இராக்காலங்களில் தங்களின் தூக்கம் தொலைத்து பாஸ் பண்ணி; 1 வருடம் காத்திருந்து, இன்னும் 4 வருடங்கள் பல்கலையில் படித்து அரச வேலைக்காக 2 வருடம் காத்திருந்து தங்களின் சாதனை வாழ்க்கையை குடும்பம் குட்டிகளோடு அனுபவிக்க மட்டுமே தயாரக்கப்படுகின்றர். ஆக மொத்தமாக தரம் 1 முதல் வேலை எடுப்பது வரை சுமார் 23 (11+3+1+4+2+2) வருடங்களைக் கழிக்கின்றனர். அப்போது மொத்தமாக வயது 29 ஆகி இருக்கும்.
இதையே ஒரு மாணவன் தரம் 11 இன் பின்னர் தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் ஆரம்பித்தால் 1 வருட எக்ஸஸ் ப்ரோகிறாம்(A/Lஇற்கு இணையானது) , ஒன்றரை வருட HND, ஒரு வருட டொப் அப் டிகிரி, 3 மாதங்களில் வெளிநாட்டில் தொழில்; ஆக மொத்தமாக (11+1+1.5+1) சுமார் 15 வருடங்கள் எடுக்கும். அப்போது அவரின் வயது 21 ஆக இருக்கும்.
அப்படி என்றால் அரச பல்கலைக்கழகங்களுக்காக கண் விழித்து பாடாய் பாடு பட்டு, அத்தனை வருடங்களும் குடும்பத்துக்கு சுமையாக நின்று பல்கலைக்கழகத்தில் படிக்கிற பெயரில் வருடங்கள் தொலைத்து மேலும் இரண்டு வருடம் தண்டமாக சுயசம்பாத்தியத்தில் உண்ணாது இருக்கிற வாழ்க்கையை எப்படி ஒரு பெருமையாகக் கொள்ள முடியும். இதற்கெல்லாம் கடைசியில் சமூகத்தில் தனியார் பல்கலைக்கழக டிகிரியோடு, தேசிய பல்கலைக்கழக டிகிரிக்கும் சம அந்தஸ்தே கிடைத்துப்போகிறது.
அதற்காக தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கிறவர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள் என்பதும் இல்லை. வெறும் ஒரு பரீட்சை மாத்திரம் ஒரு மனிதனுடைய திறமையை மதிப்பிட தகுமானதல்ல என்கிற கருத்தை பழகுகிற நண்பர்களின் திறமை மூலம் அனுபவமாக உணர்ந்து கொண்டவன் நான். இருந்தாலும் இந்த கட்டுரையின் நோக்கமானது- "தேசிய பல்கலைக்கழக அனுமதிக்கு உழைக்கிற திறமையான மாணவர்களின் வருடங்களுக்கு என்ன பெறுமதி?" என்பதே!
வியாபார கல்வியினால் பல திறமையாளர்கள் பயனடைந்தாலும், இலவசக்கல்வியை நம்பி வாழ்க்கையின் வருடங்கள் தொலைக்கிற வறுமைப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை எந்தளவிற்கு இப்போதைய இலவசக்கல்விச்சூழல் காலத்தின் போட்டிக்கு ஈடு செய்கிறது என்பது பற்றி ஆராயப்பட வேண்டியது இப்போது மிக அவசியமானதே.
ரோட்டுப் பள்ளங்களிலும், பாலங்கள் கட்டும் கான்ட்ராக்ட்களிலும் அரசியல் தொலைக்கிற பெருந்தகைகளே! சமூகத்தில் பாடு பட்டு முன்னேறிய புத்திஜீவிகளே! நீங்களும் இதற்கு பொறுப்பாளிகளே? என்ன செய்யப்போகிறீர்கள்.
எங்கு கண்டாலும் பொறுக்கப்படவேண்டிய தொலைந்த சொத்தைப் பெற்றுக்கொள்வதில் இருக்கிற உரிமைகள் மாணவர்களிடையேயாவது உணரப் படுமா???..
ஆதங்கத்துடன்,
எம்.எம்.மத்தீன்.
(அரச/தனியார் கல்லூரிகளில்
கற்றுக்கொண்டு இருக்கும்
மாணவன்.)

0 Comments