இன்று மற்றும் நாளை தென் கடற்பகுதியில் தெவிநுவரவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விண்ணிலிருந்து மர்மப் பொருளொன்றின் பகுதியொன்று வெள்ளிக்கிழமையன்று தெற்கு கடலில் உடைந்து விழும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்திருந்தமையே , இதற்கு காரணம் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஸ்ட் லால் பெர்ணான்டோ எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் அன்றைய தினம் அப்பிரதேசத்தில் விமான சேவையில் ஈடுபடவேண்டாம் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தால் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பொருள் வெள்ளிக்கிழமை காலை 11.50 க்கு தெவிநுவர கடற்பகுதியில் இருந்து 65 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் விழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments