ஏழு வயது சிறுவன் ஒருவனைப் பயன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் 7 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வளர்ப்பு மீன் விற்பனை செய்யும் கடையொன்றில், அதனை நிர்வகித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவன், அவருக்கு அறிமுகமான 7 வயது சிறுவனை பாலியல் செய்கைக்கு உட்படுத்தி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து இருகுடும்பங்களுக்கும் இடையில் அடிதடி பிரச்சினை ஏற்பட்டு, விடயம் வவுனியா பெண்கள் சிறுவர் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இளைஞனுக்கு எதிராக பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டுடன் வவுனியா மேல் நீதிமன்றதில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் அரச சார்பில் அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்தார் எதிரி சார்பில் சட்டத்தரணிகளான மொகமட் சபீஸ், அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
விசாரணையின் முடிவில் இளைஞனைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டமும் நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments