Subscribe Us

header ads

தீவிராவாதியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள இசை அரங்கத்தின்மீது மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்திய ஒரு தீவிராவாதியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்சில் நடைபெற்ற பெரிய அளவிலான தற்கொலைப்படை தாக்குதலாக கருதப்படும் இந்த கோரச் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவனின் பெயர் ஓமர் இஸ்மாயில் மொஸ்தபாயி(29) எனவும் அவனது சிதைந்த விரலை வைத்து பிரான்ஸ் போலீசார் இன்று அடையாளம் கண்டு பிடிச்சாங்கலாம் என பிரான்ஸ் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

அவனது அண்ணன் மற்றும் தந்தையை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துவரும் போலீசார், பலியானவரின்  நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றார்களாம்.

கால்பந்தாட்ட மைதானம் மற்றும் இரு இசை அரங்களில் நேற்று முன்தினம் மனித வெடிகுண்டுகளாக மாறியும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட எட்டு பேரும் பலியாகிவிட்ட நிலையில், இந்த தாக்குதலின் வீரியத்தையும், வேகத்தையும் பார்க்கும்போது, இதில் ஈடுபட்டுவர்கள் அனைவரும் ஈராக் அல்லது சிரியாவுக்கு சென்று அங்கு தீவிர பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று நம்புவதாக பிரான்ஸ் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments