புத்தளம் பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தில் முற்றிலும் வித்தியாசமான கணித முகாம் ஒன்று 13.11.2015 அன்று அஷ்: ஆஸாத் ஸிராஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லமஹ் இந் நிகழ்வில் 25 இற்கும் அதிகமான வளவாளர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நாடளவிய ரீதியில் நடைபெறும் கருத்துகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது.
மாணவியர்களுக்கு முழுக்க முழுக்க பெண் வளவாளர்களைக் கொண்டு வகுப்புக்கள் நடாத்தப்பட்டமையும், ஒரு வகுப்பிற்கு சுமார் 15 பிள்ளைகள் 2 வளவாளர்கள் வீதம் தனித்தனியே வகுப்புக்கள் திட்டமிட்டு நடாத்தப்பட்டமையும் மாணவர்களதும் குறிப்பாக ஆசான்களதும் வரவேற்பைப் பெற்றது.
இந்த முகாமுக்காக விஷேட வளவாளர்களாக ஜம்இய்யாவின் துணை தலைவரும், மத்திய சபை உறுப்பினருமான அஷ்: ஆஸாத் ஸிராஸ் (நளீமி) – NOTHING IS IMPOSSIBLE என்ற தலைப்பிலும் புத்தளம் தளவைத்தியசாலை வைத்தியர் DR: பராஹத் LEARING TECNQUESஎன்ற தலைப்பிலும் சுவாரஷ்யமான உரைகளை நிகழ்த்தினர்.
இந்த கணித முகாமுக்காக உதவிய வளவாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்பாளிப்பானாக
0 Comments