Subscribe Us

header ads

பேஷ் கவருடன் சென்ற இஸ்லாமிய பெண்மனிக்கு வைத்தியரிடம் கடின திட்டு

முஸ்லிம் பெண்மணி ஒருவர் தன்னுடைய கண் சிகிச்சைக்காக கண்டியிலுள்ள தனியார் கண் சிகிச்சை நிலையத்திற்கு அபாயா அணிந்து   பேஷ் கவருடன் சென்றவர் அங்குள்ள வைத்திய நிபுணருடன் பேஷ் கவரை கலட்ட முடியாது என தர்க்கம் புரிந்ததால் அவர் வைத்தியிடம்  கடின திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு  சிகிச்சையைப் பெற்று சென்றுள்ள சம்பவம் ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்  நடைபெற்றுள்ளது.

நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண்மணி வைத்தியரைச் சந்திப்பதற்காக உள்னே சென்றார்.  வைத்திய அதிகாரி அந்தப் பெண்மணியின் கண்ணை பரிசோதனை செய்வதக்காக பேஷ் கவரை கலட்டும் படி கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண்மணி கலட்ட மாட்டேன் என ஆங்கிலத்தில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். அந்த வைத்திய நிபுணர் அந்தப் பெண்மணியிடம் இந்தப் பேஷ் கவரைக் கலட்டா விட்டால் நான் எவ்வாறு உங்களுடைய கண்ணை பரிசோதனை செய்வது. இந்த இடம் சிங்கள மக்களுக்கு என்றோ தமிழ் மக்களுக்கு என்றோ முஸ்லிம் மக்களுக்கு என்றோ ஒதுக்கப்பட்ட இடமல்ல. வைத்திய சேவை என்பது பொதுவானது. என்னுடைய கால நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம். உடனடியாக வெளியே சேல் என அந்தப் பெண்மணியைப் பார்த்து அதட்டிக் கூறிவிட்டு அந்த சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் சகோதரரைப் பார்த்து நான் இங்கு பேசியதில் எதும்  தவறுகள் உண்டா எனக் கேட்டுள்ளார்.

அந்த முஸ்லிம் நபர் இந்த இடத்தில் பேஷ் கவரைக் கலட்டாமல் கண்ணுக்குரிய சிகிச்சை செய்ய முடியாது என்பது ஒரு சின்னப் பிள்ளையும் புரிந்து கொள்ளும். அந்த முஸ்லிம் பெண்மணியைப் பார்த்து பேஷ் கவரைக் கலட்டாமல் எப்படி கண்ணைச் பரிசேதனை செய்வது  எனவும் கலட்டி விட்டுத்தானே பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்  அந்த முஸ்லிம் நபர் கூறியுள்ளார். 

அதன் பின்னர் அந்தப் பெண்மணி பேஷ் கவரைக் கலட்டியுள்ளார். அந்த வேளை அந்தப் பெண்மணி அணிந்திருந்த  பர்தா கூட  அவருடைய உடம்பை இறுக்கமாக கவர்ச்சியை உண்டு பண்ணக் கூடியதாக இருந்துள்ளது. இவ்வாறு இறுக்கமாக பர்தாவை அணிந்து கொண்டு பேஸ் கவரைப் போட்டுக் கொண்டு வைத்திய நிபுணர்கள் மத்தியில் மலினப்பட்டுப் போன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட சகோதரர் இந்த எமது முஸ்லிம் பெண்மணியின் நிலை தொடர்பாக மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

-இக்பால் அலி-

Post a Comment

0 Comments