Subscribe Us

header ads

நல்லிணக்கத்துக்கான முயற்சியில் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கும் சோபித தேரரின் மறைவு

இலங்­கையில் ஊழலும், மோச­டியும் அற்ற நல்­லாட்சி உரு­வாக வேண்­டு­மென்று அய­ரா­து உ­ழைத்த கோட்டே நாக­வி­ஹா­ரையின் பிர­தம குரு மாது­லு­வாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்­கி­யத்­திற்கும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான முயற்­சியில் இடை­வெ­ளி­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அன்­னா­ரது மறைவு குறித்து வெளி­யிட்­டுள்ள அனு­தாபச் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள அனு­தாபச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
கோட்டே நாக­வி­ஹா­ரையின் பிர­தம குருவும்; சமூக நீதிக்­கான தேசிய அமைப் பின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர், சிங்­கப்­பூரில் கால­மான செய்தி கேட்டு அதிர்ச்­சியும், கவ­லையும் அடைந் தேன்.
இவ்­வாண்டு ஜன­வரி 8 ஆம் திகதி நாட்டில் மலர்ந்த நல்­லாட்­சிக்கு வழி­கோ­லி­ய­வ­ராக மறைந்த தேரர் மதிக்­கப்­ப­டு­கின்றார். அத்­துடன் நான்கு தசாப்­தங்­க­ளாக இந்­நாட்டு மக்­க­ளுக்கு நேர்­மை­யான ஆட்சி மற் றும் சிறப்­பான சமூ­கக்­கட்­ட­மைப்பு என்­ப­வற்றின் அவ­சி­யத்தை அவர் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்றார். அநீ­தி­க­ளுக்­கெ­தி­ராக அவர் வீதியில் இறங்கிப் போரா­டி­யி­ருக்­கின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பற்­றிய தெளி­வான விளக்கம் அவ­ருக்கு இருந்­தது. அன்­னா­ரிடம் நாம் அவ்­வப்­போது உரிய ஆலோ­ச­னை­களைப் பெற்று வந்­துள்ளோம். அண்­மையில் நாம் அவ­ருடன் கோட்டே நாக­வி­ஹா­ரையில் நடத்­திய கலந்­து­ரை­யா­டலின் போது நல்­லாட்சி மலர்ந்தும் கூட, அதனால் எதிர்­பார்க்­கப்­படும் அர­சியல் மாற்­றங்கள் போதி­ய­ளவு ஏற்­பட்­ட­தாக தெரி­வில்­லை­யென எங்­க­ளிடம் அவர் விசனம் தெரி­வித்தார்.
நோய்­வாய்ப்­பட்டு அறுவைச் சிகிச்­சைக்கு ஆளா­கி­யி­ருந்த மறைந்த தேரரின் உடல் நலனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் அதிக அக்­கறை செலுத்தி வந்­தனர்.
நாட்டில் பொது­வாக சிறு­பான்மை மக்­க­ளுக்கும் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக சிங்­கள பௌத்த தீவிர இன­வாத சக்­திகள் சில தலை­தூக்­கி­யுள்ள கால­ கட்­டத்தில் சோபித தேரர் போன்று நேர்மை யாகச் சிந்தித்துச் செயல்படும் சமய குருமா ரின் நடுநிலையான அணுகுமுறை பெரிதும் மெச்சத்தக்கது.இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தமது அனுதாபச் செய் தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments