Subscribe Us

header ads

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு அபராதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை இன்று மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டன் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதில் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாதவர்கள், நடத்துன அனுமதி பத்திரம் இல்லாமல் இருந்த நடத்துனர்கள், பஸ்ஸில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்ற சாரதிகளையும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தி குற்றங்களை இனங்கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த செயற்பாடானது தீபாவளி பண்டிகை முடியும் வரை நடத்தவிருப்பதாகவும் கடந்த 2 நாட்களில் பரிசோதனை செய்ததன் மூலம் ரூபா ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments