அறுபத்தொன்பதாண்டுகளாய் அரும்பணியில் ஈடுபட்டு அயராது உழைத்து!
பாலர் முதல் பண்டிதர் வரை பல் கலையும் கற்பித்து பதவி நிலை வரை நம்மை உயர்த்திய கற்பிட்டியின் கலங்கரை விளக்கமே...... கல்விக்கூடமாம் அல் அக்ஸாவே.........!
உன் கடந்த கால கல்விப்பாதையில் நீ கடந்து வந்த படித்தரங்கள் தான் எத்தனை... உன்னோடு தோள் சேர்த்து நடந்த நாட்களில் நாம் அடைந்த வெற்றிகள் தான் எத்தனை...... உன்னைப் போற்றிப் புகழ்ந்திடும் என் நெஞ்சம்
அதை சொல்ல வார்த்தைகள் தான் பஞ்சம்.... சாகரமாம் உன் கல்வியகத்தின்
சாதனைகள் மேலும் தொடர்ந்திட.... சிறந்த கல்விமான்களின் பிறப்பிடமாய் நீ திகழ்ந்திட.... வாயார வாழ்த்துகிறேன் நீ வளர்த்து விட்ட நன் மாணவனாய்........
முஹம்மட் ஸம்ஷாம் ஷபீக்
கடாரிலி இருந்து..............!


0 Comments