Subscribe Us

header ads

முஸ்லிம் மக்கள் கடந்த பல வருடங்களாக மன ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Video)

முஸ்லிம் மக்கள் கடந்த பல வருடங்களாக மன ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத அரசியல் அழுத்தங்களினால் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்ட காலமும் இருந்துள்ளது.

எனவே, அனைத்து மக்கள் சமூகங்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்து நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

‘பொலன்னறுவையை மேம்படுத்துவோம்’ எனும் தலைப்பிலான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் கீழ் கதுறுவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக அரசாங்கத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments