Subscribe Us

header ads

மணல்குன்று அஹதிய்யாவுக்கு அலுமாரி அன்பளிப்பு.!

புத்தளம் மணல்குன்று அஹதிய்யா சன்மார்க்க போதனா பீடத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இரும்பு அலுமாரி ஒன்றினை சமூக ஆர்வலர் தாவூத் முஹம்மத் சதானுடீன் பெருமனதுடன் அன்பளிப்பு செய்துள்ளார். ما شاء الله

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் (191 புள்ளி), தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மணல்குன்று அஹதிய்யா மாணவன் எம்.என்.எம்.அஸ்ஹர் அதனை நேற்று (18.10.2015) மாணவர்களிடம் ஒப்படைத்தார். الحمد لله

இந்த அஹதிய்யாவில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியைகள் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக தாவூத் முஹம்மத் சதானுடீன் சாஹிரா தேசிய கல்லூரிக்கு இது போன்ற இரு அலுமாரிகளை பெற்றுத் தந்தமை நன்றியுடன் நினைவுக் கூறத்தக்கது. جزاك الله خير /بارك الله فيك


-Mohamed Muhsi-

Post a Comment

0 Comments