Subscribe Us

header ads

நாட்டை மீட்டெடுப்பதற்கு தங்களது வாழ்வை தியாகம் செய்தவர்களுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவா நல்லாட்சி? (PHOTOS)

நாட்டை மீட்டெடுப்பதற்கு தங்களது வாழ்வை தியாகம் செய்தவர்களுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவா நல்லாட்சி? என சிங்கள ராவய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மிருசுவில் பகுதியில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போதே  அந்த அமைப்பின் தலைவர் அகமீமன தயாரத்ன தேரர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேரர்:

யுத்தத்தின்போது தவறிழைத்த சுனில் ரத்நாயக்கவை மரண தண்டனையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். நாட்டின் அரசியலமைப்பினூடாக சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என  தெரிவித்தார். 





Post a Comment

0 Comments