இத்தாலிய வடிவமைப்பாளர்களான அனா சிற்றலி மற்றும் ராவோல் பிரெட் ஸெல் ஆகியோரால் இந்த புதிய முறைமை உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.
இந்தப் புதிய முறைமையின் கீழ் சடலங்களை இராட்சத பிரிகையடையக்கூடிய கொள்கலங்களில் தனித்தனியாக வைத்து மண்ணில் புதைக்கப்படுகின்றன. பின்னர் அந்தக் கொள்கலங்களுக்கு மேலாக புதிய மரக்கன்றுகள் நடப்படும்.
இந்நிலையில் வளரும் அந்த மரங்களுக்கு கொள்கலங்களிலுள்ள சடலங்கள் போஷணையாகப் பயன்படும்.
இந்த புதிய முறைமை கல்லறைகளைக் கொண்ட மயானங்களின் உருவாக்கத்திற்கு பதிலாக நல்லடக்க காடுகள் விருத்தியாவதற்கு வழிவகை செய்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாக அமையும் என அந்த வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

0 Comments