இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லையென அரசாங்கம் ஐ.நா.வில் உறுதியாளித்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் புனர்வாழ்வளிக்கும் விதமாக அமைய வேண்டுமே தவிர பழிவாங்குவதாக அமையக்கூடாது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் எழுந்துள்ளது. உலகில் 100 நாடுகளுக்கு மேல் மரண தண்டனை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக இன்று குரல் கொடுக்கப்படுகின்றது. மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டங்கள் பிரித்தானியர் காலத்தில் காணப்பட்டன.
இன்று உலகம் பழைமையான பழிவாங்கல்கள் தண்டனை முறைமைகளிலிருந்து விடுபட்டு ஒழுக்க விழுமியங்களை கொண்ட தண்டனைகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.
குற்றம் செய்தவர்களை பழிவாங்குவதற்கான தண்டனைகள் அல்ல. குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். அதுவே நவீன உலகின் முற்போக்கு சிந்தனையாகும்.
குற்றம் செய்தவர்களை பழிவாங்குவதற்கான தண்டனைகள் அல்ல. குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். அதுவே நவீன உலகின் முற்போக்கு சிந்தனையாகும்.
சட்டங்கள் பழிவாங்கும் நோக்கில் அமையக் கூடாது. உலகில் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதில்லை. ஐ.நா சபையில் மரண தண்டனை உலகில் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டு வரப்பட்டது.இதற்கு இலங்கை ஆதரவு வழங்கியது.
இலங்கை மீது இன்று மனித உரிமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு உலகம் எம்மை திரும்பி பார்த்தும் கொண்டிருக்கின்றது.எனவே,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அண்மையில் ஐ.நா சபையில் உரையாற்றும் போது இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தபடமாட்டாது எனத் தெரிவித்தார். இம் முறை ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய புனித பாப்பரசரும் உலகில் மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் இன்று மரண தண்டனை வழங்குவது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பில் குற்றச்செயல்களை வகைப்படுத்தி தண்டனை வழங்குவது தொடர்பிலும் பரிந்துரைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன என்றார்.
0 Comments