Subscribe Us

header ads

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேட்டில் மாற்றம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேட்டில் மாற்றங்களை மேற்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்பொழுது, உயர் தரத்துக்கு கற்கை நெறிகளைத் தெரிவு செய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திலுள்ள பாடநெறிகள் தொடர்பிலான எந்தவித அறிவும் இன்றியே அவற்றைத் தெரிவு செய்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் தனத எதிர்கால கல்வி நடவடிக்கையை எந்த இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவை வழங்குவது இந்த புதிய கையேட்டின் நோக்கமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த கையேடு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதனை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments