இலங்கையில் காணப்படும் ஐம்பது குடும்பங்களில் ஒருவர் ஏதாவது ஒரு குற்றச் செயலுக்காக சிறைவாழ்க்கை அனுபவிப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பிரபல ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலையிலுள்ள எல்லோரும் உண்மையான குற்றவாளிகள் அல்லர். பொலிஸ், நீதிபதிகள் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியன விட்ட தவறுகளினால் குற்றமிழைக்காதவர்களும் குற்றவாளிகளாக சிறையில் வாழ்கின்றனர்.
தற்பொழுது மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் காணிப் பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கொலைகாரர்களாக மாறியவர்கள் எனவும் ஆய்வின் மூலம் அறியவந்துள்ளது.
மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் திட்டமிட்ட அடிப்படையில் கொலை செய்தவர்கள் என குறிப்பிட்ட சிலரே காணப்படுகின்றனர்.
இலங்கை நாட்டின் சட்டத்தின் படி, மனித கொலைகள், போதைப் பொருள் வியாபாரம் மற்றம் அரச துரோக செயல்கள் என்பனவற்றுக்கே மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் சட்டத்தரணி சுனில் வடகல மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments