வருடாந்தம் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களில் பெண்களின் வீதம் அதிகரித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிரி அறிவித்துள்ளார்.
வருடாந்தம் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளும் பெண்களின் தொகை 40 வீதமாக காணப்பட்டதாகவும், தற்பொழுது இவ்வருடத்தில் 50 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதுவரையில் அரச அனுமதி பெற்ற சாரதி பயிற்சி பாடசாலைகளினூடாக இலகுரக வாகனங்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பித்துள்ளவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் புதிதாக 25 ஆயிரம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.


0 Comments