காட்டிக் கொடுப்பவர்களே நான் உங்களையும் ஆசீர்வாதம் செய்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
என்னையும் ராஜபக்ச குடும்பத்தையும் எல்லா விடயங்களிலும் காட்டிக் கொடுத்தேனும் தனது இருப்பினை தக்க வைத்துக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.
அவ்வாறானவர்களையும் நான் ஆசீவாதம் செய்கின்றேன்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்ளை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
எனக்கு போதியளவு அனுபவம் காணப்படுகின்றது. நிலைமைகளை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மிரிஹானவில் உள்ள தமது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments