Subscribe Us

header ads

வரவேற்பு என்ற பெயரில் நடத்தப்படும் மோசமான சடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் சீன விமான பணிப்பெண்கள்

விமானத்தில் வரவேற்பு என்ற பெயரில் நடத்தப்படும் மோசமான சடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் சீன நாட்டு பிரபல விமான நிறுவனப் பணிப்பெண்கள் தற்போது இறங்கியுள்ளனர்.

சீனாவின் பிரபல விமான நிறுவனமான குன்மிங் ஏர்லைன்ஸில், புதிதாக விமான பணிப்பெண்ணுக்கான பணிபுரிய  வருவோரை வித்தியாசமான ஒரு சடங்கின் மூலமாக இதன் பணியாளர்கள் பல ஆண்டுகளாக வரவேற்று வருகின்றனர். 

புதிதாக விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வரும் பெண்கள், இந்த விமானத்தில் உள்ள பயணிகள் தமது கைப்பைகளை வைத்துக் கொள்ளும் சிறிய பெட்டி போன்ற இடத்துக்குள் அமுக்கி வைக்கப்படுகின்றனர்.

இதை தவிர்க்க முற்படும் பெண்களை ‘இறுமாப்பு கொண்டவள்’ என சகப் பணியாளர்கள் கருதுவதால் வேறுவழியின்றி சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த தண்டனையைப் பல பெண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது தொடர்பாக அலுவலகத்தில் புகாரளித்தும் யாரும் கண்டுகொள்ளாததால், கடந்த வார இறுதியில் சடங்கு என்ற பெயரில் இதுபோல அடைக்கப்படும் பெண்ணின் புகைப்படத்தை சமூக தளத்தில் சில பணிப்பெண்கள் வெளியிட்டனர்.

இது இந்நாட்டு இணையங்களில் தலைப்பு செய்தியாகவே, இந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிகள் கடந்த திங்களன்று ஊடகங்கள் முன்னர் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். 

எனினும், இதுவரை இச்சம்பவம் தொடர்பாக விமான பணிப்பெண்களிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை எனவும், விரைவில் இப்படிச் செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்களின் இந்தக் கூற்று பயணிகளுக்கோ, பயணத்துக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments